செய்திகள்
கோப்புபடம்

2ம் தவணை தடுப்பூசி - செல்போன் மூலம் பேசி பொதுமக்களை அழைக்கும் ஊழியர்கள்

Published On 2021-09-22 10:43 GMT   |   Update On 2021-09-22 10:43 GMT
இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடப்பதற்கு முன்பாக மாவட்டத்தில், 16.56 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியிருந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில், 17.47 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் 18 வயதை கடந்த 10 லட்சத்து, 37 ஆயிரத்து 236 பேருக்கும், 45 வயதை கடந்தவர்களில் 4 லட்சத்து 60 ஆயிரத்து, 596 பேருக்கும், 60 வயதை கடந்தவர்களில் 2லட்சத்து 49 ஆயிரத்து 852 பேருக்கும் என மாவட்டத்தில் மொத்தம், 17 லட்சத்து 47 ஆயிரத்து, 684 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 9.10 லட்சம் பேர்  ஆண்கள், 8.36 லட்சம் பேர் பெண்கள். இதில் 1.62 லட்சம் பேருக்கு கோவேக்ஷின் செலுத்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு செலுத்தியவர் எண்ணிக்கை 15.82 லட்சமாக உள்ளது. இரண்டு தவணை தடுப்பூசியும் 3.02 லட்சம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடப்பதற்கு முன்பாக மாவட்டத்தில், 16.56 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த முகாமில் 89 ஆயிரத்து 286 பேருக்கு தடுப்பூசி செலுத்தியதால், மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை, 17.47 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் 18 வயதை கடந்தவர்கள் 20 லட்சத்து 77 ஆயிரத்து, 955 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 17 லட்சத்து, 47 ஆயிரத்து 684 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில் இன்னமும் 3.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. 

அக்டோபர் இறுதிக்குள், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்திய நிலையில் அதற்கான பணிகளில் மாவட்ட சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடிப்படையாக கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி மாநகராட்சி பகுதியில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் 50ஆயிரம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை உரிய காலக்கெடுவுக்குள் போடாமல் உள்ளனர். 

அவர்களின் செல்போன் எண்களை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்பு கொண்டு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News