செய்திகள்
கோப்புபடம்.

சாலையை சீரமைக்க கோரி சிறுபூலுவப்பட்டியில் 21 - ந்தேதி கடையடைப்பு போராட்டம்

Published On 2021-09-19 07:27 GMT   |   Update On 2021-09-19 07:27 GMT
சிறுபூலுவப்பட்டி பகுதி அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் கூட்டம் நடந்தது.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் மாநகராட்சி சிறுபூலுவப்பட்டி பிரதான சாலையில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாமதமாக நடந்து வருகிறது. குழாய் பதிக்க ரோட்டில் தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாமல் ரோடு முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர் விபத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிறுபூலுவப்பட்டி பகுதி அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் கூட்டம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்தது. இதில் அதிகாரிகளை கண்டித்தும், குழாய் பதிக்கும் பணியை விரைவாக முடித்து ரோட்டை புதுப்பிக்க வலியுறுத்தியும் வருகிற 21-ந் தேதி சிறுபூலுவப்பட்டி பகுதியில் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News