செய்திகள்
கண்டெடுக்கப்பட்ட நாணயம்.

275 ஆண்டுகளுக்கு முந்தைய டச்சு நாணயம் கண்டுபிடிப்பு

Published On 2021-09-18 09:16 GMT   |   Update On 2021-09-18 09:16 GMT
நாணயத்தின் ஒரு பக்கத்தில் டச்சு கம்பெனியை குறிக்கும் வகையில் வி.ஓ.சி. என்ற எழுத்தும், மறுபக்கத்தில் சிங்க சின்னமும் இடம்பெற்றுள்ளது.
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வாகரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். தனது வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பழமையான நாணயம் கிடைத்தது. அதனை தொல்லியல் ஆய்வாளரான அரிஸ்டாட்டில் மற்றும் மதுரையை சேர்ந்த லட்சுமணமூர்த்தியிடம் காண்பித்துள்ளார்.

அதனை ஆய்வு செய்த 2 பேரும் கூறியதாவது:-

டச்சுக்காரர்கள் கி.பி. 1602-ல் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவினர். இதுதான் உலகின் முதல் பன்னாட்டு வணிக நிறுவனமாகும்.

இந்த கம்பெனி தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், இலங்கையிலும் வணிகம் செய்யும்போது புழக்கத்தில் விடப்பட்ட நாணயம்தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1746 என அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் டச்சு கம்பெனியை குறிக்கும் வகையில் வி.ஓ.சி. என்ற எழுத்தும், மறுபக்கத்தில் சிங்க சின்னமும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த நாணயங்களை கொச்சி, புலிகாட், நாகப்பட்டிணம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயம் மலேசியா, இந்தோநேசியா, ஜாவா போன்ற நாடுகளுக்காக தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ராமநாதபுரம், திருபுல்லாணி, சேதுகரை, பால்கரை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றனர்.



Tags:    

Similar News