செய்திகள்
கோப்புபடம்

மாணவர்கள் மைதானத்தில் விளையாட தடை

Published On 2021-09-18 06:50 GMT   |   Update On 2021-09-18 06:50 GMT
குறைந்தபட்ச மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்தாலும் 8 பாடவேளை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 90 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். வழக்கமாக நாள் ஒன்றுக்கு 8 பாடவேளை பிரிக்கப்படும். 

காலையில் நான்கு, மதியம் நான்கு இடையே உணவு இடைவேளை என அட்டவணை தயாரிக்கப்படும். குறைந்தபட்ச மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்தாலும் 8 பாடவேளை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வாரத்தில் இரு விளையாட்டு வகுப்பு இருக்கும். பள்ளிகள் திறந்த போதும் ஆங்காங்கே மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருவதால் விளையாட்டு பாடப்பிரிவில் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விளையாட்டு ஆசிரியர்கள் கூறுகையில்:

விளையாட்டு பாடவேளையில் ஆசிரியர் வகுப்புக்கு செல்ல வேண்டும். விளையாட்டு பயிற்சி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மாணவர்களை மைதானத்துக்கு அழைத்து வரலாம். சமூக இடைவெளியுடன் அமர வைத்து பாடம் கற்பிக்க வேண்டும். 

ஆனால் மைதானத்தில் ஒன்றாக இணைந்து குழு விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
Tags:    

Similar News