செய்திகள்
கோப்புபடம்.

1-ந்தேதியில் இருந்து பொது இ-சேவை மையங்களில் இலவசமாக வாக்காளர் அட்டை பெறலாம்

Published On 2021-09-10 08:10 GMT   |   Update On 2021-09-10 08:10 GMT
வாக்காளர் வசதிக்காக மாற்று அடையாள அட்டை வேண்டுவோர் இலவசமாக பெற்றுக் கொள்ள தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது இ-சேவை மையங்களில் வாக்காளர் மாற்று அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

அடையாள அட்டை தொலைந்து விட்டாலோ, திருத்தம் செய்திருந்தாலோ, புதிய அடையாள அட்டையை பிரிண்ட் எடுக்க வேண்டியிருக்கிறது.

பொது சேவை மையங்களில் இதற்காக ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் வாக்காளர் வசதிக்காக மாற்று அடையாள அட்டை வேண்டுவோர் இலவசமாக பெற்றுக்கொள்ள தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கியுள்ளது.

அக்டோபர் 1-ந்தேதி முதல் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது இ-சேவை மையங்களில் இலவசமாக பிரிண்ட்செய்து வழங்கப்படும். எனவே மாற்று அடையாள அட்டை வேண்டுவோர் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றனர்.

இ- வாக்காளர் அட்டை வேண்டுமென்றால் https://nvsp.in என்ற இணையதளத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து செல்போனுக்கு வரும் கடவு சொல்லை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tags:    

Similar News