செய்திகள்
கோப்புபடம்

கேரளாவில் கொரோனா உச்சம் - உடுமலை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரம்

Published On 2021-08-31 07:33 GMT   |   Update On 2021-08-31 11:16 GMT
உடுமலை சின்னாறு, ஒன்பதாறு சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் கொரோனா பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.
உடுமலை:

நாடு முழுவதும் ஒருபுறம் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் இருந்து திருப்பூர் வருவோரை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநில எல்லையில் வருவாய்த்துறை, போலீசார், சுகாதாரம், மருத்துவ பணிகள் துறை அடங்கிய 3 குழுவினர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

உடுமலை சின்னாறு, ஒன்பதாறு சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் கொரோனா பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டு‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் வைத்திருந்தாலும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எல்லையோர மலைபகுதியில் வசிப்போர் உடல்நலம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.

யாராவது காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். கேரளாவில் இருந்து வருவோர் தடுப்பூசி செலுத்த ஏதுவாக மாநில எல்லையில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்க தேவையான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
Tags:    

Similar News