செய்திகள்
மகேந்திரகிரியில் நடந்த சோதனை

மகேந்திரகிரியில் ராக்கெட் எரிபொருள் சோதனை... ககன்யான் திட்டத்திற்கு முதல் வெற்றி

Published On 2021-08-28 14:29 GMT   |   Update On 2021-08-28 14:29 GMT
2022 இறுதிக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை நிறைவேற்ற இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது.
மகேந்திரகிரி:

இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந்தியாவில் இருந்து முதன் முதலாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய திட்டப் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 2022 இறுதிக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை நிறைவேற்ற இஸ்ரோ முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ‘ககன்யான்’  விண்கலத்தில் 3 வீரர்கள் விண்வெளி செல்ல உள்ளனர்.
 
இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் முக்கிய அம்சமாக, விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கான திரவ எரிபொருள் சோதனை நடைபெற்றது. நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News