செய்திகள்
கோப்புபடம்

நாளை பூஜ்ய நிழல் தினம் - புகைப்படம் எடுத்து அனுப்பினால் பரிசு

Published On 2021-08-23 10:01 GMT   |   Update On 2021-08-23 10:01 GMT
அரிய வானியல் நிகழ்வை புகைப்படம் எடுத்து அனுப்புபவர்களுக்கு சான்றுகள் வழங்கப்படும்.
உடுமலை:

வழக்கமான நாட்களில் சூரியனால் ஏற்படும் ஒரு பொருளின் நிழலானது சூரிய உதயத்தில் அதிக நீளத்தோடு இருந்து, உச்சி நேரத்தில் குறையும். பின்பு சூரியன் மறையும் வரை மீண்டும் நீள்கிறது. அதேநேரம் ஓராண்டில் இரண்டு முறை சூரியனால் ஏற்படும் நிழலைகாண இயலாத நிகழ்வு நடக்கிறது. 

அதன்படி ஒரு பொருளின் நேர் மேலாக 90 டிகிரி உச்சியில் வரும் நிகழ்வு பூஜ்ய நிழல் நாளாக அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு திருப்பூரில் நாளை மற்றும் நாளை மறுநாள் 25-ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் கூறியதாவது:-

இந்த அரிய வானியல் நிகழ்வை புகைப்படம் எடுத்து அனுப்புபவர்களுக்கு சான்றுகள் வழங்கப்படும். குறிப்பாக, சிறந்த புகைப்படங்களுக்கு விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் தயாரித்த அறிவியல் சார்ந்த ‘சிடி’க்கள், புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும். 

புகைப்படங்களை, galilioscienceclub@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும், தகவல் அறிய 9942467764, 8778201926 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News