செய்திகள்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் ஐவர்பாணியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை காணலாம்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு

Published On 2021-08-23 04:26 GMT   |   Update On 2021-08-23 04:26 GMT
ஒகேனக்கல் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஒகேனக்கல்:

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையொட்டி இரு அணைகளில் இருந்தும உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8000 கன அடியாக இருந்தது. மாலையிலும் அதே நீர்வரத்து நீடித்தது.

இந்த நிலையில் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.



Tags:    

Similar News