செய்திகள்
மழை

தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-08-21 08:14 GMT   |   Update On 2021-08-21 08:14 GMT
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னையில் இன்று பலத்த மழை பெய்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்.



சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் 25-ந்தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags:    

Similar News