செய்திகள்
பனியன் நிறுவனத்தில் தீ பற்றி எரிவதையும் தீயணைப்பு வீரர்கள் அணைப்பதையும் படத்தில் காணலாம்

திருப்பூர் டையிங் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

Published On 2021-07-26 07:03 GMT   |   Update On 2021-07-26 07:03 GMT
திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்கிறு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:

திருப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அங்கேரிபாளையம் வெங்கமேடு தோட்டம் பகுதியில் பனியன் துணிகளுக்கு சாயமேற்றும் டையிங் நிறுவனம் வைத்துள்ளார். நேற்று விடுமுறை என்பதால் நிறுவனம் மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்றிரவு நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. 

சிறிது நேரத்தில் அங்கிருந்த பனியன் ரோல்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. இதனை பார்த்த  அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய  வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

2 மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட பனியன் ரோல்கள் தீயில் எரிந்து நாசமாகின. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?  என்று அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags:    

Similar News