செய்திகள்
கோப்புபடம்

பள்ளி ஸ்மார்ட் வகுப்பறையில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-07-25 07:11 GMT   |   Update On 2021-07-25 07:11 GMT
உடுமலை கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தயார்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பை திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் பார்வையிட்டார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்  ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

ஸ்மார்ட் வகுப்புகளால் மாணவர்களின் கல்வி மீதான நாட்டம் அதிகரிப்பதாகவும், படங்களைக் காட்டி அவற்றின் பெயர்களை கூறச் செய்தல், மனப்பாடப் பகுதிகளை ராகத்துடன் பாடும் வீடியோக்களை பார்க்கச் செய்தல் உள்ளிட்டவைகளால் உற்சாகம் அடைவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

உடுமலை கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தயார்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பை  திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் பார்வையிட்டார். அப்போது தொடர்ந்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமையாசிரியர் அனுராதா, ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விளக்கினர்.
Tags:    

Similar News