செய்திகள்
தூவானம் அருவி.

தூவானம் அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2021-07-24 10:21 GMT   |   Update On 2021-07-24 10:21 GMT
நீர்வரத்தின்றி காய்ந்து கிடந்த துவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மறையூர், மூணாறு, சின்னாறு போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் சிறு சிறு அருவிகள் தோன்றி காண்போரை கவர்ந்து வருகிறது. 

இதனிடையே அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரமான பாம்பாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து தூவானம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நீர்வரத்தின்றி காய்ந்து கிடந்த துவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் நின்று தூரத்தில் வெள்ளி கோடுகளாய் தெரியும் அருவியின் அழகை நீண்ட நேரம் பார்த்து ரசிக்கின்றனர். அருகில் சென்று பார்த்து ரசிக்க தகுந்த வழித்தடங்களை வனத்துறையினர் செய்து தரவேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News