செய்திகள்
கோப்புப்படம்.

14 ஆண்டுகளாக காத்திருக்கும் அர்ச்சகர்களுக்கு பணி- பூசாரிகள் சங்கம் வலியுறுத்தல்

Published On 2021-07-19 08:27 GMT   |   Update On 2021-07-19 08:27 GMT
14 ஆண்டுகளாக காத்திருக்கும் அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
பல்லடம்:

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காலி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அர்ச்சகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற வேதாகம பாடசாலையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே பயிற்சி பெற்று முடித்த 225 பூசாரிகள் கடந்த 14 ஆண்டுகளாக  பணி கிடைக்குமா என காத்திருக்கின்றனர். 

பயிற்சி பெற்று காத்திருக்கும் அர்ச்சகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாத சூழலில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுவது ஏன் என்பது தெரியவில்லை. எனவே 14 ஆண்டுகளாக காத்திருக்கும் அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். 

அர்ச்சகர் பணியிடங்களுக்கான வயது வரம்பு 35 என அறநிலைத்துறை நிர்ணயித்துள்ள நிலையில், காத்திருப்போருக்கான வயது வரம்பு உச்ச வரம்பை நீக்க வேண்டும் என பூசாரிகள் சங்கத்தின் மாநில தலைவர் வாசு வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

Similar News