செய்திகள்
கோப்புபடம்

கனரக வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி-பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2021-07-11 08:31 GMT   |   Update On 2021-07-11 08:31 GMT
தொழில்களுக்காக இயக்கப்படும் கனரக வாகனங்கள், சாலை விதிமுறைகளுக்கு புறம்பாக அசுர வேகத்தில் செல்கின்றன.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு தொழில்களுக்காக இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மடத்துக்குளம் தாலுகா பகுதி பொதுமக்கள் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில், மடத்துக்குளம் பகுதியின் பல இடங்களில் தென்னை நார் தொழிற்சாலைகள், குவாரிகள், செங்கல்சூளைகள், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இது தவிர தேங்காயை மொத்தமாக குவித்து வைத்து மட்டையை உரித்து விற்பனைக்கு அனுப்பும் தொழிலும் நடக்கிறது. 

இந்த தொழில்களுக்காக இயக்கப்படும் கனரக வாகனங்கள், சாலை விதிமுறைகளுக்கு புறம்பாக அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் பல விபத்துக்கள் நடந்துள்ளன. இதற்கு தீர்வாக வணிக ரீதியாக இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த போலீசாரும் போக்குவரத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News