செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு-கம்யூனிஸ்டு புகார்

Published On 2021-07-07 07:17 GMT   |   Update On 2021-07-07 07:17 GMT
40 வீடுகள் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அவினாசி:

அவினாசி-சேவூர் சாலை சூளை அருகில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 2.92 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் 447 வீடுகள் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இதில் 40 வீடுகள் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி குடியிருப்புகளுக்கும்   பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தகுதி இல்லாத பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் பயனாளிகள் இடையே வீடு கிடைக்குமா?, கிடைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் அவினாசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீட்டு வசதி வாரியத்திற்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அவினாசி பேரூராட்சி பகுதியில் வீடு இல்லாத துப்புரவு பணியாளர்கள் மற்றும் சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கும் ஏற்கனவே அரசு அறிவித்த அரசாணைப்படி உண்மை விபரம் கண்டறிந்து எவ்வித இடைத்தரகர்கள் இல்லாமல், அரசியல் தலையீடு இல்லாமல், நடுநிலையோடு தமிழக வீட்டு வசதி வாரியம் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவினாசி ஒன்றிய குழுவின் கோரிக்கையாகும். 

மேற்கண்ட பிரச்சினையில் அவினாசி ஊராட்சி ஒன்றியம், அவிநாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர், தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும். 

அவினாசியில் 447 வீடு ஒதுக்கீடு செய்வதில் தவறு நடக்காமல் வெளிப்படைத்தன்மையுடன் அனைத்துக் கட்சிகளையும் கலந்து முடிவு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News