செய்திகள்
சாலை அருகே கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.

உடுமலை சாலையில் பறக்கும் குப்பைகள்-வாகன ஓட்டிகள் அவதி

Published On 2021-07-03 06:47 GMT   |   Update On 2021-07-03 06:47 GMT
குப்பைகள் பறந்து வாகனங்களில் செல்பவர்கள் மேல் விழுகிறது. மேலும் துர்நாற்றம் ஏற்படுவதால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டை செல்லும் வழியில் மலையாண்டிபட்டினத்தில் இருந்து  கண்ணமநாயக்கனூர் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. 

இந்தசாலையில் வரும் வழியில் உள்ள பள்ளங்களில் வீட்டுக் கழிவுகள், காய்கறி கழிவுகள், கோழி கழிவுகள் மற்றும் தேவையில்லாத பொருட்களை சிலர் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். 

இதேபோல் ராமசாமி நகரில்  இருந்து  அரசு கலைக்கல்லூரி செல்லும் வழியில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி குப்பை கழிவுகளை கொட்டிவிட்டு செல்வதால் குப்பைகள் பறந்து வாகனங்களில் செல்பவர்கள் மேல் விழுகிறது. 

மேலும் துர்நாற்றம் ஏற்படுவதால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் சுகாதாரகேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News