செய்திகள்
கோப்புப்படம்

மோட்டார் சைக்கிள் மானியம் கிடைக்காமல் தவிக்கும் பெண்கள்

Published On 2021-06-23 06:33 GMT   |   Update On 2021-06-23 06:33 GMT
உள்ளாட்சி அமைப்புகளில் மோட்டார் சைக்கிள் மானியம் வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன.
திருப்பூர்:

தமிழக அரசு செயல்படுத்திய ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் திட்டத்தில் ரூ. 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.பணிக்கு செல்லும் பெண்கள் தங்கள் செலவில் மோட்டார் சைக்கிள் வாங்கி விண்ணப்பம் செய்தபின் ரூ.25ஆயிரம் மானியம் வங்கி கணக்கு வாயிலாக வழங்கப்பட்டது.

இந்தநிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன் அவசரகதியில் இத்திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.பெண்களும் கடன் வாங்கியாவது மோட்டார் சைக்கிள்களை வாங்கி விண்ணப்பித்தனர்.மானியம் கைக்கு வந்து சேரும் முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.அதன்பின் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.இதனால் மோட்டார் சைக்கிள் வாங்கிய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், 

ஒரு வாரத்துக்குள் மானியம் கிடைத்துவிடும் என்று அதிகாரிகள் கூறியதால் கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி விண்ணப்பித்தோம். சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் இதுவரை மானிய உதவி கிடைக்கவில்லை.விரைவில் மானியம் வழங்க வேண்டும் என்றனர்.மகளிர் திட்ட அதிகாரிகள் கூறும் போது, உள்ளாட்சி அமைப்புகளில் மோட்டார் சைக்கிள் மானியம் வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன.விண்ணப்பங்கள் முறையான ஆவணங்களுடன் எங்களுக்கு வந்தடைந்தால் தகுதியான பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்றனர். 
Tags:    

Similar News