செய்திகள்
கோப்புப்படம்

எண்ணை விலை உயர்வால் எகிறிய இனிப்பு-காரம் விலை

Published On 2021-06-21 09:18 GMT   |   Update On 2021-06-21 09:18 GMT
ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட தற்காலிக தட்டுப்பாட்டை பயன்படுத்தி இடைத்தரகர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் பகுதியில் சமையல் எண்ணை விலை உயர்வைத்தொடர்ந்து, இனிப்பு, காரத்தின் விலை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.120 முதல் ரூ.140 வரை விற்ற ரீபைண்டு செய்யப்பட்ட எண்ணை விலை தற்போது ரூ.200ஆக அதிகரித்துள்ளது. 

மரச்செக்கு எண்ணையின் விலை ரூ.300 வரை விற்பனையாகிறது. இதில் செய்யப்படும் பலகாரங்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது. இனிப்பு ,கார வகைகளுக்கு கடைகளின் தரத்திற்கு ஏற்ப ரூ.20 முதல் ரூ.50 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:

மிக்சர், முறுக்கு, மைசூர்பா உள்ளிட்ட எண்ணை பலகாரங்களின் விலை உயர்ந்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட தற்காலிக தட்டுப்பாட்டை பயன்படுத்தி இடைத்தரகர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.அத்தியாவசியமான சமையல் எண்ணை மற்றும் இதர உணவு பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்குள் அரசு கொண்டு வரவேண்டும் என்றனர்.
Tags:    

Similar News