செய்திகள்
கோப்புப்படம்

அரசு பஸ்கள் பராமரிப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-06-21 07:05 GMT   |   Update On 2021-06-21 07:05 GMT
ஊரடங்கு தளர்வில் திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு காரணமாக பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படவில்லை.
உடுமலை:

உடுமலை கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன் பஸ்கள் 58-ம் என மொத்தம் 94 பஸ்கள் உள்ளன. முழு ஊரடங்கையட்டி கடந்த மே மாதம் 24-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்படாத நிலையில் உடுமலையில் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் அனைத்தும் உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு பின்புறம் பை-பாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஊரடங்கையட்டி கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்பதால் பஸ்களை இயக்குவதற்கு தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் பஸ்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்தது. ஆனால் நேற்று அறிவித்த ஊரடங்கு தளர்வில் திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு காரணமாக பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் பஸ்களை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த பணிகள் அரசு போக்குவரத்துக்கழக உடுமலை கிளை மேலாளர் மணிகண்டன் மேற்பார்வையில் அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களால் நடந்து வருகிறது.
Tags:    

Similar News