செய்திகள்
சீரமைக்கப்பட்ட சாலையை படத்தில் காணலாம்.

சாலையை சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு

Published On 2021-06-20 09:51 GMT   |   Update On 2021-06-20 09:51 GMT
அவினாசி சாலையில் மண் அதிகளவில் குவிந்துள்ளதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அடிக்கடி மண்ணில் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகரில் உள்ள சாலைகளில் விபத்துகள் ஏற்படும் வகையில் உள்ள பள்ளங்கள் மற்றும் சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை கண்டறிந்து  விபத்துகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா  போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இந்தநிலையில் திருமுருகன்பூண்டி காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட  ராமகிருஷ்ணா பள்ளி அருகில் அவினாசி சாலையில் மண் அதிகளவில் குவிந்துள்ளதால், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அடிக்கடி மண்ணில் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் சார்பில் விபத்துகள் நிகழாதவாறு சாலையில் இருந்த மண் முழுவதுமாக அகற்றப்பட்டது.
 
இதையடுத்து விபத்தை தடுக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றிய திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டினார்.
Tags:    

Similar News