செய்திகள்
கோப்புப்படம்

18 வயதினருக்காக 3,550 டோஸ் தடுப்பூசி

Published On 2021-06-18 07:37 GMT   |   Update On 2021-06-18 07:37 GMT
செல்லப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் 24,109 பேர் உள்ளனர். இங்கு 190 கோவிஷீல்டு, 40 கோவாக்சின் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை நகரம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 3 லட்சத்து 18 ஆயிரத்து 557 பேர் உள்ள நிலையில் 3,550 டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.

உடுமலை நகரில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 48,457 உள்ளனர், இங்கு 390 கோவிஷீல்டு மற்றும் 80 கோவாக்சின் டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்திலுள்ள எரிசனம்பட்டி முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 28,543 பேர் உள்ளனர். இங்கு 230 கோவிஷீல்டு,50 கோவாக்சின் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் 18 வயதிற்கும் மேற்பட்டோர் 47,546 பேர் வசிக்கின்றனர்.இங்கு 380 கோவிஷீல்டு மற்றும் 80 கோவாக்சின் ஒதுக்கப்பட்டுள்ளது.அமராவதி நகரில் 29, 014 பேர் உள்ளனர்.இங்கு 230 கோவிஷீல்டு,50 கோவாக்சின் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செல்லப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் 24,109 பேர் உள்ளனர். இங்கு 190 கோவிஷீல்டு, 40 கோவாக்சின் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்தில் குடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் 16,355 பேர் உள்ளனர்.இம்மையத்திற்கு 130 கோவிஷீல்டு,30 கோவாக்சின் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெதப்பம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் 14,569 பேர் உள்ளனர். இங்கு 120 கோவிஷீல்டு மற்றும் 30 கோவாக்சின் ஒதுக்கப்பட்டுள்ளது.ராமச்சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் 15,948 பேர் உள்ளனர். இங்கு 130 கோவிஷீல்டு, 30 கோவாக்சின் வழங்கப்பட்டுள்ளது.பூளவாடி ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் 13, 284 பேர் உள்ளனர். இங்கு 110 கோவிஷீல்டு, 20 கோவாக்சின் இருப்பு உள்ளது.உடுமலை நகரம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 3 லட்சத்து 18 ஆயிரத்து 557 பேர் உள்ள நிலையில் 3 ஆயிரத்து 550 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,கொரோனா தடுப்பூசி 3 சதவீதம் அளவிற்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. தினமும் சராசரியாக 100 பேருக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மையங்களில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News