செய்திகள்
கோப்புப்படம்

பல்நோக்கு உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2021-06-17 08:24 GMT   |   Update On 2021-06-17 08:24 GMT
விண்ணப்பிக்கும் பெண்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அலுவலக உதவியாளராக பணியாற்றியிருக்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.- 

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பூர் மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அலுவலக உதவியாளராக பணியாற்றியிருக்க வேண்டும். இந்தப்பணிக்கு மாத ஊதியமாக ரூ.6,400 வழங்கப்படும். ஆகவே தகுதியான பெண்கள் வரும் ஜூன் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர்,அறை எண் 35 மற்றும் 36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் -641604 மற்றும் 0421-2971168, 91504-08101 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News