செய்திகள்
செம்மறிஆடுகள் (கோப்புப்படம்)

நாங்குநேரி பகுதியில் செம்மறி ஆடுகளுக்கு பரவும் மர்மநோய்: 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

Published On 2021-06-09 09:27 GMT   |   Update On 2021-06-09 09:27 GMT
நாங்குநேரி பகுதியில் செம்மறி ஆடுகளுக்கு பரவும் மர்மநோய் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த பகுதியில் உள்ள அனைத்து ஆடுகளுக்கும் நோய் தாக்காமல் இருக்க ஊசி போட்டு உள்ளனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டி பகுதியில் ஏராளமான விவசாயிகள் செம்மறி ஆடு வளர்த்து வருகிறார்கள்.

இந்த ஆடுகளுக்கு சமீபத்தில் மர்மநோய் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த பகுதியில் உள்ள அனைத்து ஆடுகளுக்கும் நோய் தாக்காமல் இருக்க ஊசி போட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தைச் சேர்ந்த மாரியப்பன், கண்ணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பண்ணையில் கடந்த ஒரு வாரமாக தினமும் ஆடுகள் கொத்து கொத்தாக செத்து வருகிறது.

இதுவரை 50க்கும் மேற்பட்ட ஆடுகள் செத்துவிட்டதாக அவர்கள் புகார் கூறினர். ஏற்கனவே அந்த ஆடுகளுக்கு தடுப்பூசிகளும் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது பலியாகும் ஆடுகளின் கண்களில் ஒருவித சிவப்பு வட்டம் பரவி கண்கள் வீங்கி பலியாகிறதாம். இந்த மர்மநோய் குறித்து ஆடுகள் வளர்க்கும் மாரியப்பன், கண்ணன் ஆகியோர் கால் நடைத்துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர்.

கால்நடை அதிகாரிகள் நேரில் பார்த்து ஆய்வு செய்து இது ஒருவித அம்மை நோய் என்று கூறி உள்ளனர். எனவே இந்த நோய் தாக்குதலில் பலியான ஆடுகளுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News