செய்திகள்
கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் வழங்கிய காட்சி.

கொரோனா நிவாரண நிதி-ஒரு மாத சம்பளத்தை வழங்கிய சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2021-06-04 07:47 GMT   |   Update On 2021-06-04 11:56 GMT
கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கிய சப்-இன்ஸ்பெக்டரை திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பாராட்டினார்.
திருப்பூர்:

கொரோனா தொற்றின் 2-வது அலையின் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் அரசின் கொரோனா நிதிக்காக பல்வேறு அமைப்பினரும் தன்னார்வலர்களும் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முத்துசெல்வம் என்பவர் தனது ஒரு மாத சம்பள தொகையான ரூ.31 ஆயிரத்து 384க்கான  காசோலையை திருப்பூர் மாவட்ட  கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் நேரில் வழங்கினார். காசோலையை பெற்று கொண்ட கலெக்டர், முத்துசெல்வத்தை பாராட்டினார். 
Tags:    

Similar News