செய்திகள்
வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

போலீசார் அதிரடி சோதனை-3,500 வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-06-01 08:29 GMT   |   Update On 2021-06-01 12:51 GMT
கொரோனா ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 450 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பாக கடந்த 24-ந்தேதி முதல்  போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி திருப்பூர் மாநகரில் முககவசம் அணியாத ஆயிரத்து 836 பேருக்கு  ஒரு லட்சத்து  63 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 27 பேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெளியில் சுற்றியது தொடர்பாக 900 வழக்குப்பதிவு செய்து 892 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்தில் முககவசம் அணியாத  755 பேருக்கு ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத  26 பேருக்கு  13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி சுற்றியது தொடர்பாக 506 வழக்குப்பதிவு செய்து  2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.2 ஆயிரத்து 558 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News