செய்திகள்
கோப்புபடம்

ரூ.5ஆயிரம் உதவித்தொகை-அமராவதி அணை மீனவர்கள் மகிழ்ச்சி

Published On 2021-05-30 07:25 GMT   |   Update On 2021-05-30 07:25 GMT
கொரோனா நிவாரண தொகையாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் அமராவதி அணையில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை:

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம்  சார்பில் ஒப்பந்த அடிப்படையில்  50 மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடிக்கின்றனர்.கட்லா,  ரோடு, மிருகால், ஜிலேபி வகை மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தினசரி ரூ.300 முதல் ரூ-.600 வரை மீனவர்களுக்கு வருமானம் கிடைத்து வந்தது.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.
  
கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது நிவாரண தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் நிவாரண தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  இந்தநிலையில் அமராவதி மீனவர்களுக்கு ரூ.5ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதுகுறித்து அமராவதி மலைவாழ்மக்கள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜ் கூறுகையில், வருமானமின்றி தவித்த மீனவர்களுக்கு அரசு ரூ.5ஆயிரம் அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம் என்றார்.
Tags:    

Similar News