செய்திகள்
தடுப்பூசி முகாமை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்ட காட்சி.

காங்கயத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு

Published On 2021-05-27 08:12 GMT   |   Update On 2021-05-27 11:38 GMT
காங்கேயத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
காங்கயம்:

காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா நோய் தடுப்புப்பணிகள் குறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.அவருடன் கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் உடன் சென்றார்.

வெள்ளக்கோவில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், கம்பளியம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், தனியாருக்கு சொந்தமான வெள்ளக்கோவில் கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், காங்கயம் ஒன்றியம் பச்சாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற 18-44 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், பச்சாபாளையம் விதை சுத்திகரிப்பு நிலையம்,சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை மருத்துவத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை  தனியார்  நிறுவனத்தினர் ரூ.5 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர், கலெக்டரிடம் வழங்கினர். அப்போது இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர்  சாந்தி, துணை இயக்குநர்  (பொது சுகாதாரம்) டாக்டர்  ஜெகதீஷ்குமார், காங்கயம்  தாசில்தார் சிவகாமி ஆகியோர்  உடனிருந்தனர்.
Tags:    

Similar News