செய்திகள்
விஷம் வைத்ததில் உயிரிழந்த மயில்கள்.

அவினாசியில் 21 மயில்கள் பலி

Published On 2021-05-23 06:55 GMT   |   Update On 2021-05-23 07:10 GMT
அவினாசி அருகே 21 மயில்களை விஷம் வைத்து கொன்றவர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் உள்ள குளங்களில் மான், மயில், முயல் உள்ளிட்ட வன உயிரினங்கள் ஏராள மாக உள்ளன. 
இவை  உணவு, தண்ணீருக்காக  வனப் பகுதியை  விட்டு வெளி யேறும் போது நாய்கள் துரத்தியும், வாகனங்களில் அடிபட்டும்  உயிரிழந்து  வருகின்றன.  இந்தநிலையில் ஓலக்காடு நீரோடை பகுதியில் ஏராளமான மயில்கள் உயிரிழந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த  வனத்துறையினர்  அப்ப குதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 21 மயில்கள் உயிரிழந்து கிடந்தன. அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
  
இறந்த மயில்கள் விஷம் வைக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.-  

இதையடுத்து மயில்களுக்கு விஷம் வைத்த நபர்கள் குறித்து வனத்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   
Tags:    

Similar News