செய்திகள்
கோப்புபடம்

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் நாய்கள்

Published On 2021-05-21 05:56 GMT   |   Update On 2021-05-21 05:56 GMT
திருப்பூரில் ஊரடங்கால் தெருநாய்கள் உணவின்றி தவித்து வருகிறது.
அவிநாசி:

திருப்பூர் திருமுருகன்பூண்டி, ஆட்டையாம்பாளையம், கருவலூர், சேவூர் உள்ளிட்ட நகர மற்றும் கிராம புறங்களில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளன. இங்கு சாலையோரங்களில்  அதிகளவில்  சில்லி சிக்கன், மீன், காளான் போன்ற அசைவ மற்றும் சைவ உணவுகள் விற்கும் தள்ளுவண்டிக்கடைகள் இருந்தன.வாடிக்கையாளர்களால் தூக்கி வீசப்படும் எலும்பு உள்ளிட்ட இறைச்சி உணவின் கழிவுகளை அந்த நாய்கள் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தன.
 
தற்போது ஊரடங்கால் தள்ளுவண்டி கடைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.எனவே அக்கடைகள் மூலம் தங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வந்த தெருநாய்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.மாலை நேரங்களில் அந்த கடைகள் இருந்த இடத்தில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.உணவு கிடைக்காததால் அங்குமிங்கும் அலைந்து திரிகின்றன.மேலும் அந்த வழியாக செல்வோரை விரட்டுகின்றன. எனவே தெருநாய்களுக்கு உணவு வழங்க   உள்ளாட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News