செய்திகள்
திருப்பூரில் பொதுமக்களுக்கு அபராதம் விதித்த காட்சி.

ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்

Published On 2021-05-15 09:00 GMT   |   Update On 2021-05-15 09:00 GMT
திருப்பூரில் ஊரடங்கு விதிகளை மீறிய 1,450 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவு விதிமுறையை மீறி இரு சக்கர வாகன ங்களில் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து  மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அப ராதம்  விதித்து வருகின்றனர்.

அதன்படி மாநகர  பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகளில்  முககவசம் அணியாமல் வந்த 300 பேருக்கு தலா ரூ.200, சமூக இடைவெளியை கடை பிடிக்காத 15 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல் புறநகர் பகுதிகளில்  முக கவசம் அணியாமல்   வந்த   வாகன ஓட்டிகள் 1,150 பேருக்கு  தலா ரூ.200-ம், சமூக இடைவெளியை கடை பிடிக்காத 25 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.  மொத்தம் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் அப ராதம் வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News