செய்திகள்
கள்ளக்குறிச்சி பருத்தி சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்த பருத்தி மூட்டைகளை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சி வாரச்சந்தைக்கு பருத்தி வரத்து குறைந்தது

Published On 2021-05-06 16:55 GMT   |   Update On 2021-05-06 16:55 GMT
கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வரத்து குறைந்தது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன் கிழமை அன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு நேற்று கள்ளக்குறிச்சி, விழுப்பரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 80 விவசாயிகள் மொத்தம் 268 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதனை ஆத்தூர், மகுடஞ்சாவடி, கொங்கனாபுரம், சத்தியமங்கலம், அன்னூர், திருப்பூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு கொள்முதல் செய்தனர்.

இதில் எல்.ஆர்.ஏ.ரகம் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,070-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5509- க்கும் விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ.5 லட்சத்து 2 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. கடந்த வாரம் பருத்தி சந்தைக்கு விற்பனைக்காக 595 பருத்தி மூட்டைகள் வந்தன. ஆனால் தற்போது பருத்தி சீசன் முடிவடையும் நிலையில் உள்ளதால், இந்தவாரம் சந்தைக்கு 268 பருத்தி மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. 

இத்த தகவலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News