செய்திகள்
மதுபானம்

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை

Published On 2021-05-01 06:09 GMT   |   Update On 2021-05-01 06:09 GMT
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் நேற்று டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட மது விற்பனை அதிகரித்தது.
சென்னை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பார்கள் மூடப்பட்டன. மது விற்பனை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்றும், நாளையும் மதுக்கடைகள் மூடப்பட்டன. 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால், நேற்று மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மதியம் முதல் இரவு 9 மணி வரை நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர். நாளை தேர்தல் முடிவு வெளியாக இருப்பதால் அரசியல் கட்சி தொண்டர்கள், அதனை கொண்டாடும் வகையில் மதுபானங்களை அதிக அளவில் வாங்கி குவித்தனர்.



இதனால் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் நேற்று டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட மது விற்பனை அதிகரித்தது. வழக்கமாக தினமும் ரூ.120 கோடிக்கு மது விற்பனை நடைபெறும்.

ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது. இதில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிகபட்சமாக ரூ.63.44 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மண்டலத்தில் ரூ.56.72 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.55.93 கோடி யும், மதுரை மண்டலத்தில் ரூ.59.63 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.56.37 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது.
Tags:    

Similar News