செய்திகள்
மரத்தடியில் செயல்படும் போலீஸ் நிலையம்

மரத்தடியில் செயல்படும் போலீஸ் நிலையம் - கொரோனா தொற்று எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Published On 2021-04-21 17:55 GMT   |   Update On 2021-04-21 17:55 GMT
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மூங்கில்துறைப்பட்டு:

தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த சாராய வியாபாரி, அடி தடி வழக்கில் கைதான வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சில போலீஸ் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வளாகத்தில் உள்ள மரத்தரடி மற்றும் திறந்த வெளி பகுதியில் போலீஸ் நிலையம் தற்காலிகமாக இயங்கி வருவதை பார்க்க முடிகிறது.

புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் மற்றும் கைதாகி அழைத்து வருபவர்களை இங்கு வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பி போலீஸ் நிலைய வளாகத்தின் முன்புள்ள மரத்தடியில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விசாரணைக்கு மற்றும் புகார் கொடுக்க வருபவர்களை மரத்தடியில் வைத்தே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
Tags:    

Similar News