செய்திகள்
திருவாரூர் ரெயில் நிலையத்தில் லாரியில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் ஏற்றிய காட்சி

திருவாரூரில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

Published On 2021-04-09 10:53 GMT   |   Update On 2021-04-09 10:53 GMT
திருவாரூரில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசியாக வழங்கிட மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி திருவாரூரில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக திருவாரூரை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் நெல்மூட்டைகளுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News