செய்திகள்
கோப்புப்படம்

உளுந்தூர்பேட்டையில் சோதனை- திமுக பிரமுகர் காரில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

Published On 2021-04-01 05:07 GMT   |   Update On 2021-04-01 05:07 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
உளுந்தூர்பேட்டை:

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.1லட்சத்து 10 ஆயிரம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காரில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அந்த கார் விருத்தாச்சலம் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், அந்த காரில் உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்து செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உளுந்தூர்பேட்டை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News