செய்திகள்
பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

போலீஸ் கட்டுப்பாட்டில் சென்னை மாநகரம்: பறக்கும்படை சோதனையால் குற்றங்கள் குறைந்தன

Published On 2021-03-29 10:44 GMT   |   Update On 2021-03-29 10:44 GMT
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால், அதற்கு உரிய கணக்கு காட்ட வேண்டும் என்பது தேர்தல் விதியாகும். இதையடுத்து சிறு வியாபாரிகள் எடுத்து செல்லும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்களை தடுக்க 24 மணிநேரமும் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். பறக்கும் படையில் இடம்பெற்றுள்ள காவலர்களும், வருவாய் துறையினரும் மோட்டார் சைக்கிள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் இரவு பகலாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் கட்டுக்கட்டாக பணமும் பிடிபட்டு வருகிறது.

இதனால் 24 மணிநேரமும் போலீஸ் கட்டுப்பாட்டில் சென்னை மாநகரம் உள்ளது.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால், அதற்கு உரிய கணக்கு காட்ட வேண்டும் என்பது தேர்தல் விதியாகும். இதையடுத்து சிறு வியாபாரிகள் எடுத்து செல்லும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

சிறிய வியாபாரிகள் தங்களது கடைகளில் பணி புரிபவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும், பொருட்கள் வாங்குவதற்கும் தாங்கள் சிறுக, சிறுக சேமித்து வைத்துள்ள பணத்தை எடுத்து செல்லும் போது பறக்கும் படையிடம் மாட்டிக் கொள்கிறார்கள். இது போன்று சேர்த்து வைக்கும் பணத்திற்கு வியாபாரிகளிடம் எந்த கணக்கும் இருக்காது என்பதால், அந்த பணத்தை மீண்டும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பறக்கும்படை சோதனையால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றங்கள் சென்னையில் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த சில நாட்களாகவே செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பறக்கும்படையினர் சிறிய சந்துகளிலும் கூட சோதனை நடத்துவதால் குற்றவாளிகள் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடுவது இல்லை.

அதேநேரத்தில் பல இடங்களில் பிரசார கூட்டமும் அதிகமாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகி றார்கள். இதனால் போக்கு வரத்து நெரிசலும் ஏற்படு கிறது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் செல்லும்போது போக்கு வரத்து நெரிசலில் சிக்கி இவர்களிடம் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்திலும் குற்றவாளிகள் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News