செய்திகள்
அடிப்படை வசதிகளை தேர்தல் பார்வையாளர் ராம்லக்கன் பிரசாத் குப்தா ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

கொரடாச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Published On 2021-03-26 14:04 GMT   |   Update On 2021-03-26 14:04 GMT
கொரடாச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
கொரடாச்சேரி:

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் அந்த அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மற்றும் நன்னிலம், சட்டசபை தொகுதி தேர்தல் பார்வையாளர் ராம் லக்கன் பிரசாத் குப்தா பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அதனை தொடர்ந்து திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளியில் அடிப்படை வசதிகள், குடிதண்ணீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் சாய்வு தளம், கழிவறை, மின் இணைப்பு உள்ளதா? என ஆய்வு செய்தார்.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும், தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது நீடாமங்கலம் தாசில்தார் மணிமன்னன், தனி தாசில்தார் சமூகபாதுகாப்பு ராஜகணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News