செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டபோது எடுத்த படம்.

100 ‘விவிபேட்’ எந்திரங்கள் நெல்லைக்கு வந்தன

Published On 2021-03-05 11:01 GMT   |   Update On 2021-03-05 11:01 GMT
யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள உதவும் 100 ‘விவிபேட்’ எந்திரங்கள் நெல்லைக்கு வந்துள்ளன.
நெல்லை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், அம்பை, நாங்குநேரி ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள உதவும் ‘விவிபேட்’ எந்திரங்கள் நெல்லையை அடுத்த ராமையன்பட்டி ஒழுங்குமுறை கிட்டங்கியில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்கள் முதல் நிலையாக சரிபார்த்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட மத்திய சேமிப்பு கிட்டங்கியில் இருந்து உரிய பாதுகாப்புடன் நேற்று லாரி மூலம் நெல்லைக்கு 100 விவிபேட் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த எந்திரங்கள் ஒழுங்குமுறை விற்பனை கூட கிட்டங்கியில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் தென்காசி மாவட்டத்திற்கு 80 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 100 விவிபேட் எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் 18 விவிபேட் எந்திரங்கள் வீதம் மொத்தம் 90 எந்திரங்கள் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும் 5 தொகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. இந்த எந்திரங்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

அப்போது உதவி கலெக்டர் குமாரதாஸ், தாசில்தார் (துணை ஆய்வுக்குழு அலுவலர்) இருதயராஜ், தனி தாசில்தார் (தேர்தல்) கந்தப்பன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News