செய்திகள்
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுமா? - சத்யபிரதா சாகு விளக்கம்

Published On 2021-01-30 19:47 GMT   |   Update On 2021-01-30 19:47 GMT
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுமா என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி:

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுமா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சத்யபிரதா சாகு, தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுமே சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய முடிவினை எடுக்கும். 80 வயதுக்கு மேல் இருக்கும் வாக்காளர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படுகிறது. ஆனால் அது கட்டாயப்படுத்தப்படவில்லை, நேரில் வந்து வாக்கு செலுத்துபவர்கள் செலுத்தலாம் என தெரிவித்தார். 
Tags:    

Similar News