செய்திகள்
மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

Published On 2021-01-20 05:11 GMT   |   Update On 2021-01-20 05:11 GMT
கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
நச்சலூர்:

நச்சலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக நெல் வயல்களில் மழைநீர் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இனுங்கூர் ஊராட்சி சுக்காம்பட்டி, நச்சலூர் புரசம்பட்டி, நங்கவரம் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் அமைச்சர் கூறுகையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி 1,264 எக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதற்கான கணக்கீடு பணி முழுமையாக முடிவடைந்ததும் இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும் என கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மலர்விழி மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News