செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியபோது எடுத்த படம்

பரமக்குடியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-17 11:53 GMT   |   Update On 2021-01-17 11:53 GMT
பரமக்குடியில் உதயநிதி ஸ்டாலின், அவரது பேச்சை கண்டிக்காத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி:

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரை தரக்குறைவாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின், அவரது பேச்சை கண்டிக்காத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் கலந்து கொண்டு ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

பெண்களை இழிவுபடுத்தி பேசினால் மக்கள் பொங்கி எழுவார்கள் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளீர்கள். தாயை தெய்வமாக வணங்கும் இனம் தமிழ் இனம். தாயை, தெய்வத்தை, பெண்மையை யார் பழித்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. உதயநிதி ஸ்டாலின் நாவை அடக்க வேண்டும். இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

முன்னதாக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பரமக்குடி முத்தையா, போகலூர் நாகநாதன், நயினார்கோவில் குப்புசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தர்மர், ஆணிமுத்து, சுந்தரபாண்டியன், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி, நயினார்கோவில் ஒன்றிய தலைவர் வினிதா குப்புசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டி, வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி.

மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைசெயலாளர் மருதுபாண்டியன், மகளிரணி செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி, குமாரக்குறிச்சி நாகராஜ், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஜெயஜோதி, பட்டினம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, பரமக்குடி நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான், பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத், கவுன்சிலர் ஜெகதீஸ்வரி சீனிவாசன், இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட தலைவர் நல்லதம்பி, ஒன்றிய கவுன்சிலர் கரிகாலன், விவசாய அணி ஒன்றிய செயலாளர் தேத்தாங்கால் பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News