செய்திகள்
முட்டை

பறவை காய்ச்சலால் கோழி கறி, முட்டை விலை குறைந்தது

Published On 2021-01-09 02:14 GMT   |   Update On 2021-01-09 02:14 GMT
பறவை காய்ச்சல் பரவலால் கோழிக்கறி, முட்டை விலை குறைந்தது. உயிர்கோழி விலை ரூ.80 ஆக சரிந்தது.
சென்னை:

கோழி மூலம் 'சிக்கன் 65', தந்தூரி, 'கிரில்', 'லாலிபாப்', முட்டை மூலம் ஆம்லெட், ஆப்பாயில், பொடி மாஸ் என்று விதவிதமாக உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

அசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் பட்டியலில் கோழி வகை உணவுகளுக்கு முக்கிய இடம் உள்ளது. ஆனால், பறவை காய்ச்சல் பரவுகிற நேரத்தில் மட்டும் கோழி உணவுகள் விற்பனை மந்தமடையும்.

இந்தநிலையில் கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்தில் இந்த நோய் பரவி விடக் கூடாது என்பதில், தமிழக அரசு முனைப்பு காட்டிஉள்ளது.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி, வாத்து, முட்டைகளை கொண்டு வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டில் கோழி விலை சரிந்து வருகிறது. உயிர் கோழி (பிராய்லர்) கடந்த 5-ந்தேதி ரூ.100 விற்பனையானது. நேற்றுமுன்தினம் ரூ.96-க்கு விற்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று அதைவிட விலை குறைந்து ரூ.80-க்கு விற்பனையானது. இறைச்சி கடைகளில் ரூ.180-க்கு விற்பனையான கோழிகறி ரூ.160 ஆக குறைந்துள்ளது. சில்லரை விலையில் ரூ.6-க்கு விற்பனையான முட்டை 50 காசுகள் குறைந்து, 5 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் நாட்டுகோழி விலை மட்டும் குறையவில்லை. 1 கிலோ ரூ.360-க்கு விற்கப்படுகிறது.

பறவை காய்ச்சல் கட்டுக்குள் வரும் வரையில் அதன் தாக்கம் கோழி மற்றும் முட்டை விலையில் காணப்படும். எனவே வரும் நாட்களில் கோழி, முட்டை விலை தொடர்ந்து சரிவு பாதையில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News