செய்திகள்
கோப்புபடம்

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி போட்டோகிராபா் பலி

Published On 2020-12-26 13:34 GMT   |   Update On 2020-12-26 13:34 GMT
மன்னார்குடி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் போட்டோகிராபா் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:

மன்னார்குடியை அடுத்த அசேஷம் அய்யப்பன் நகரை ேசா்ந்தவா் கலியன் என்கிற கலைச்செல்வன் (வயது 58). இவர் போட்டோகிராபா். நேற்று காலை கலியன் மன்னார்குடி அரசு மருத்துவமனை எதிரே மொபட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த கலியன் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கலியன் உயிரிழந்தார்.இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து போட்டோகிராபர் கலியன் மீது மோதிய மோட்டார் சைக்கிளில் வந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News