செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் அருகே தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-22 06:56 GMT   |   Update On 2020-12-22 06:56 GMT
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிரணி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிரணி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி முன்னிலை வகித்தார்.

தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.செல்வராஜ் கண்டன உரையாற்றினார். தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி உள்பட பெண்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது சமையல் கியாஸ் விலை உயர்வை குறைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதுபோல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஊத்துக்குளி வட்டக் குழு சார்பில் நேற்று இரவு ஊத்துக்குளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், வட்டக்குழு செயலாளர் சிவசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News