செய்திகள்
வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமை மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் - கலெக்டர் சாந்தா ஆய்வு

Published On 2020-12-14 14:15 GMT   |   Update On 2020-12-14 14:15 GMT
திருத்துறைப்பூண்டி பகுதியில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமை கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட வேலூர் உதவி பெறும் பள்ளி மற்றும் கச்சனம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் திருவாரூர் மாவட்டத்தில் 1,168 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்கள் நேற்றுடன் முடிவடைந்தது.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் www/nvsp.in என்ற வலைதளங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியல்களை elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News