செய்திகள்
வாக்காளர் பட்டியல்

புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைபவர்களுக்கு செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்க இலவச டிக்கெட்

Published On 2020-12-12 07:53 GMT   |   Update On 2020-12-12 07:53 GMT
திண்டிவனம்-மயிலம் பகுதியில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் முதலில் விண்ணப்பிக்கும் 100 பேருக்கு செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்கும் இலவச டிக்கெட் வழங்கப்படும் என சப்-கலெக்டர் கூறினார்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று (12-ந் தேதி) முதல் 2 நாட்களுக்கு மொத்தம் 65 மையங்களில் வாக்காளர் திருத்தல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில் திண்டிவனம் சப்-கலெக்டர் அனு பங்கேற்று, 18 வயது நிரம்பியவர்களுக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கினார். மேலும், பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து விளக்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் திண்டிவனம்-மயிலம் பகுதியில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்பட்டியலில் முதலில் விண்ணப்பிக்கும் 100 பேருக்கு செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்கும் இலவச டிக்கெட் வழங்கப்படும் என கூறினார். இதனால் வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கு ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
Tags:    

Similar News