செய்திகள்
மெட்டாலாவில் சாலை மறியல் நடைபெற்றபோது எடுத்த படம்.

ராசிபுரம் அருகே மாணவர்கள்-விவசாயிகள் சாலை மறியல் - 14 பேர் கைது

Published On 2020-12-05 09:15 GMT   |   Update On 2020-12-05 09:15 GMT
ராசிபுரம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள் சங்கத்தினர், விவசாயிகள் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரம்:

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலாவில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினர். இதில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

சாலை மறியலில் ஈடுபட்டதாக இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பெருமாள், அய்யாதுரை உள்பட 14 பேரை ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை மெட்டாலாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மாணவர்கள், விவசாயிகளின் மறியல் போராட்டம் காரணமாக ஆத்தூர்-ராசிபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News