செய்திகள்
தமிழக அரசு

புரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை

Published On 2020-12-03 13:50 GMT   |   Update On 2020-12-03 13:50 GMT
புரெவி புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்க இருக்கும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி உள்பட 6 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாக புரெவி புயல் நேற்றிரவு இலங்கை திருகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பின் பாம்பனை நோக்கி நகர்ந்தது. இன்று மாலை நிலவரப்படி பாம்பன் அருகில் வந்தது. இதனால் ராமேஸ்வரத்தில் சூறாவளி காற்று வீசியது. தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

பாம்பன் பகுதியை கடந்து செல்லும் புரேவி புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழகத்தில் 5-ம் தேதிவரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுமுறை என அரசு தெரிவித்துள்ளது. மேலும், அத்தியாவசிய பணியைத் தவிர மற்ற பணிகளில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News