கரூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பதிவு: நவம்பர் 28, 2020 14:31
கோப்புபடம்
கரூர்:
கரூர் அருகே உள்ள வாங்கல் மணியார் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 28). டிப்ளமோ படித்துள்ள இவருக்கு, சரியான வேலை ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னன் சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.